பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் ஆய்வுக்கூட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-06 03:03 GMT
ஆய்வு கூட்டம் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்ததாவது: பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, அவர்களின் மறுவாழ்வு, இழப்பீடு பெற்று தருதல், கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை குழந்தைகள் பாதுகாப்பில் திறம்பட பயன்படுத்துவது மற்றும் வழக்குகளில் விரைவான நீதியை பெற்று தருதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலமாக குழந்தைகளை கண்காணித்தல், அவர்களை முன்பருவ கல்வியில் விடுதல் இன்றி சேர்த்தல், சமூக நலத்துறையின் மூலம் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆற்றுப்படுத்துதல், அவர்களுக்கு சட்ட உதவியை பெற்று தருதல் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு நிதியினை வழங்குதல், குழந்தை திருமணம் நடைபெறா வண்ணம் குழந்தைகளை கல்வி பயில்வதை ஊக்குவிக்கவும், குழந்தை திருமணம் நடைபெற்றால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலமாக ஏற்படுத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது. மகளிர் திட்டம் மூலமாக சுய உதவி குழுவினருக்கு கடன்களை பெற்றுதருதலில் இலக்குகளை எட்டுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News