மேலப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் !!
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை, மேலப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
By : King 24x7 Angel
Update: 2024-05-23 10:53 GMT
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை, மேலப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு கடந்த 21ம் தேதி காலை 9:00 மணியளவில் மகா கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. மாலை 6:00 மணியளவில் விநாயகர் பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, திருவிளக்கு பூஜை, முதல் கால பூஜைகள் நடந்தது. இரவு 8:00 மணியளவில் அங்குரார்ப்பணம், யாகசாலை புறப்பாடு நடந்தது. இரவு 9:00 மணியளவில் பாலகணபதி பூஜை, துவார பூஜை, மகாலட்சுமி ஹோமம், 108 மூலிகை ஹோமம், சோம கும்ப பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணியளவில் பால கணபதி பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, சிவசூரிய சோம கும்ப பூஜை, காலை 9:30 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ஏழை மாரியம்மன், விநாயகர், முருகர் மற்றும் பரிவார தெய்வங்கள் விமானம் மற்றும் மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.