மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா!

மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-06-18 06:51 GMT

மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.


பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஆவாம்பட்டியில் களி மண்ணால் அரண்மனை குதிரை சிலைகள் மற்றும் மதலை சிலைகள் அண்மையில் வடிவமைக்கப்பட்டது. அதையடுத்து திங்கள்கிழமை அந்த சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பொதுமக்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக எடுத்துவந்து, ஆதினமிளகி அய்யனார் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில்,எம். உசிலம்பட்டி, ஆவாம்பட்டி, முள்ளிப்பட்டி, மேலத்தானியம், சூரப்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்று வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீஸார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News