வெள்ள மீட்பு பணியில் மேல்மருவத்தூர் பங்காரு அம்மா பக்தர்கள்
தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் மேல்மருவத்தூர் பங்காரு அம்மா பக்தர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் மேல்மருவத்தூர் பங்காரு அம்மா பக்தர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ராஜீவ் நகர், பி அன் டி காலனி, கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர்,
மில்லர்புரம், ஹவுசிங் போர்டு காலனி, பால்பாண்டி நகர், எஸ்பிஎம் நகர், அசோக்நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கழுத்தளவு தண்ணீரில் தத்தளித்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோரை டிராக்டர் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை செவ்வாடை பக்தர்கள் செய்தனர். மேலும், தக்காளி சாதம், சாம்பார் சாதம், புளியோதரை,
குடிநீர் பாட்டில் உள்ளிட்ட உணவு பொருட்களை மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். இன்று ஜெ.ஜெ.நகர், டேவிஸ் புரம், சவேரியார்புரம், மாதா நகர், பாலதண்டாயுத நகர், தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் டயபர், மெழுகுவர்த்தி, ரொட்டி, போன்ற உணவு பொருட்கள் இன்று 3வது நாளாக வழங்கப்பட்டது. .