சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை

சீர்மரபினர் நல வாரியத்தில்உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 04:21 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1. விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4. கல்வி உதவித்தொகை 5. திருமண உதவித்தொகை 6. மகப்பேறு உதவித்தொகை 7. மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் 8. முதியோர் ஓய்வூதியம்

மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற  சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள்  அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தோர்கள் தங்கள் உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துக் கொள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புதிய கட்டடம் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News