மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்கொலை
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த முத்துலட்சுமி கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், டாய்லெட் கிளீனர், லிக்விட் குடித்து தற்கொலை செய்தார்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, காந்தி நகர் 9-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மருதநாயகம் மனைவி முத்துலட்சுமி வயது 58. இவருக்கு கடந்த 4- வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். ஆயினும், எதிர்பார்த்தபடி உடல் நலம் குணமாகவில்லை. இதனால்,விரக்தியில் வாழ்ந்து வந்த முத்துலட்சுமி, பிப்ரவரி 7ஆம் தேதி காலை 9 மணி அளவில், அவரது வீட்டில், கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும், ஹார்பிக் டாய்லெட் கிளீனர் லிக்விடை குடித்துள்ளார்.
இதனை அறிந்த முத்துலட்சுமியின் மகன் பாஸ்கர், உடனடியாக தனது தாயாரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 8ஆம் தேதி உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து பாஸ்கர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த முத்துலட்சுமியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம் பாளையம் காவல்துறையினர்.