மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், பிராஞ்சேரி பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவரை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீட்டு இல்லத்தில் ஒப்படைத்தனர்.;
Update: 2024-05-22 01:54 GMT
மனநலம் பாதிக்கப்பட்டவர் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், பிராஞ்சேரி பேருந்து நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக ஷாஜகான் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் சுற்றித் திரிந்துள்ளார். அப்பகுதி மக்கள் மூலம் இந்த தகவலை அறிந்த கல்லிடைக்குறிச்சி பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஷாஜகான் மீட்டு அன்னை தெரேசா ஸ்டார் பவுண்டேஷன் இல்லத்தில் நேற்று (மே 21) ஒப்படைத்தனர்.