மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை
மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை - காவல்துறை வழக்கு பதிவு.;
Update: 2024-03-22 17:51 GMT
காவல்துறை விசாரணை
கரூர்மாவட்டம் கடவூர் தாலுக்கா செம்பியநத்தம் அருகே உள்ள மம்பத்தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கப்பன் மகன் முருகன் வயது 27 இவரது மனைவி கீர்த்தனா வயது 23. முருகனுக்கு அண்மைக்காலமாக மனநலம் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார். இவர் "மசால் பொரி" விற்பனையை அப்பகுதியில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, திருச்சி மாவட்டம், வீரப்பூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தனது வியாபாரத்தை செய்து விட்டு, மார்ச் 20 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் முருகன் ஊர் திரும்பியுள்ளார். அப்போது தனது மனநிலம் பாதிக்கப்பட்டது குறித்து வருத்தமடைந்த முருகன், மம்பத்தையூர் பகுதியில் உள்ள சங்கர் என்பவரது தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த முருகனின் மனைவி கீர்த்தனா, உடனடியாக இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.