மெட்ரோ ரயில் திட்ட பணிகள்: மின்பாதை உபகரணங்கள் நிறுவும் பணி

மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் போரூர் - பூந்தமல்லி இடையே உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியது.

Update: 2024-05-20 16:04 GMT

மெட்ரோ பணிகள்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் இடையே உள்ள பாதையில் உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். .இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல்பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன.

தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த பகுதியில் தற்போதுவரை 600-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர்இடையே உயர்மட்ட மின்பாதைக்கான உபகரணங்கள் நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News