மேட்டூர் காவிரி ஆற்றின் குறுக்கே தண்ணீர் தேக்கும் பணி

மேட்டூர் அருகே செக்கானூர் கதவணையில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-26 16:07 GMT

தண்ணீர் தேக்கும் பணி

மேட்டூர் அணையின் அடிவாரம் முதல் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் கதவணை நீர் மின் நிலையம் வரை 0.45 டி.எம்.சி, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று செக்கானூர் கதவணை நீர் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி துவங்கியது. இதற்காக மதகுகள் உயர்த்தப்பட்டு தேக்கி வைக்கப்பட்ட 0.45 டி.எம்.சி, நீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டது.

தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டதால் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் குடிநீர் வினியோகம் பாதிப்படையாமல் இருக்க காவிரியின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கி தண்ணீரைத் தேக்கும் பணியினை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News