எம்ஜிஆர் பிறந்தநாள் விழா- முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்;
Update: 2024-01-18 03:03 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைப்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராம.ஜெயலிங்கம் கலந்து கொண்டார்.
பின்னர் ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதனையடுத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதேபோல் கொலையனூர் கிராமத்திலும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.