பெரணமல்லூர் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடினர்.

Update: 2024-01-17 11:57 GMT

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா 

வந்தவாசி அருகே பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கூட்ரோட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 107- வது பிறந்த நாளை முன்னிட்டு பெரணமல்லூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் G. செல்வராஜ் பெரணமல்லூர் கூட்டுறவு வங்கி தலைவர் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் அவர்களின் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்வில் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் ( ம) இளம் பெண்கள் பாசறை பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News