எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் கொண்டாட்டம்

ராமநாதபுரம் , மண்டபம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியர் தலைமையில் பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகே எம் ஜி ஆர் உடைய107வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-17 10:18 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள் 

ராமநாதபுரம் மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் எம்ஜிஆர் 107 பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட செயளாளர் முனியசாமி தலைமை வகித்தார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயளாளர் ஆர்ஜி மருதுபாண்டியன் முன்னிலையில் எம்ஜிஆரின்107வது பிறந்தநாள் விழாவில் பாரதிநகரில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மறியாதை செய்தனர்.

பின்பு 107 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் ஆர் ஜி ரத்தினம், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஒன்றிய நகர் கழக பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News