செய்யாறு: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா
செய்யாறு நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.;
Update: 2024-01-17 08:32 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் ஓன்றிய செயலாளர்கள் அரங்கநாதன்,துரை, அருணகிரி, ரவிச்சந்திரன், சுப்பிரமணியன்,அருண், பெருமாள், ஜனார்த்தனன், தணிகாசலம், சுரேஷ், பிரகாஷ், மகாதேவன் , சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.