விருதுநகரில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்

விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் நடந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடியேற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Update: 2024-01-18 05:06 GMT
அதிமுக கட்சியை தொடங்கிய எம்ஜிஆரின்  107 பிறந்த நாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் விருதுநகரில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் வடக்கு ஒன்றியம் சார்பாக நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட குந்தலப்பட்டி பகுதியில் அதிமுகவின் கொடி கம்பம் அமைக்கப்பட்டு அங்கு அதிமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு  கொடி ஏற்றி சிறப்பித்தார். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர்  மச்ச ராஜா உள்ளிட்ட ஏராளமான அதிமுகவை சார்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News