குமாரபாளையம் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-18 11:00 GMT
எம்ஜிஆர் பிறந்த நாள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க கழகத்தின் சார்பில் குமாரபாளையம் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் கொண்டாடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் பங்கேற்று, எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மலர்கள் தூவி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அர்ச்சுனன், ரவி, உள்பட பலர் பங்கேற்றனர்.