கனிம வள டிப்பர் லாரி கடைக்குள் புகுத்து விபத்து -ஆட்டோ சேதம்
களியக்காவிளை அடுத்த ஒற்றாமரம் பகுதியில் கனிமவள டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்து விபத்து.
Update: 2024-03-19 06:52 GMT
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றி செல்லும் லாரிகளால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. காலை மாலை வேலைகளில் லாரிகள் இயங்க கூடாது எனவும் இரவு நேரம் இயங்குவதற்கென நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதன்படி லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கேரளாவில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கனிமவள லாரி ஒற்றாமரம் பகுதியில் வைத்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மறந்திட்ட ஆட்டோவில் மோதி அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது இதில் கடை சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது இந்த விபத்து குறித்து கலியக்காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.