கனிமவள கொள்ளை - வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்
கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-03-22 04:31 GMT
சரவணன்
வேலூர் காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்து சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சரவணன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சுப்புலட்சுமி, சரவணனின் சிறை காவலை குண்டர் சட்டத்தில் நீட்டிக்க இன்று உத்தரவிட்டுள்ளார்.