கனிமவள கடத்தல்: பாஜக அபாண்ட குற்றசாட்டு - விஜய் வசந்த்
கனிம வளங்கள் மத்திய அரசின் திட்டத்திற்காகத்தான் கேரளா கொண்டு செல்லப்பட்டது. அதனால் பாரதிய ஜனதா அன்று எதிர்க்கவில்லை. அதுவும் அதானி துறைமுக பணிகளுக்காகத்தான் இந்த கனிம வளங்கள் அதிகமாக சென்றது. பாரதிய ஜனதா இதற்கு எதிராக போராட்டம் எதுவும் பண்ணாதது இதற்கு சாட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது என விஜய் வசந்த் எம்பி தெரிவித்தார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக இரண்டாவது முறையாக விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட பின்னர் முதல் முறையாக நேற்று இரவு நாகர்கோவில் வந்து வந்தார். அப்போது நாகர்கோவில் திமுக அலுவலகத்தில் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இதனை அடுத்து அவர் அளித்த பேட்டியில், - இந்த முறை இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி. குமரியில் மத்திய பாரதிய ஜனதா அரசு ரத்து செய்த ஒரு திட்டத்தை எனது முயற்சியால் 4 வழி பாதை பணிகளை தொடங்க செய்துள்ளேன். மக்கள் அதை நினைத்து உள்ளார்கள். இதற்காக ரூ. 1041 கோடி மத்திய அரசிடம் நான் போராடி பெற்று பணிகள் துவங்கப்பட்டது. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி செய்த நேரம் கூட பொன் ராதாகிருஷ்ணன் நான்கு வழிச்சாலை பாணிகளை முடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை அவர் விளக்க வேண்டும்.
கனிம வள கடத்தலில் திமுக அமைச்சர் மனோ தங்கராஜிற்கு பெரும் பங்கு உள்ளது இதேபோன்று டாரஸ் லாரியால் 6 பேர் உயிரிழந்ததில் , மனோ தங்கராஜுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்றும் பாரதிய ஜனதா வேட்பாளர் கூறியது அபாண்ட குற்றச்சாட்டுகள். கனிம வளங்கள் மத்திய அரசின் திட்டத்திற்காகத்தான் கேரளா கொண்டு செல்லப்பட்டது. ஆதனால் பாரதிய ஜனதா அன்று எதிர்க்கவில்லை. அதுவும் அதானி துறைமுக பணிகளுக்காகத்தான் இந்த கனிம வளங்கள் அதிகமாக சென்றது. பாரதிய ஜனதா இதற்கு எதிராக போராட்டம் எதுவும் பண்ணாதது இதற்கு சாட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை பரப்புவது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு கூறினார்.