உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2024-05-12 11:53 GMT
மாரத்தான் போட்டியை துவக்கிய அமைச்சர்

உலக செவிலியர் தினம் மற்றும் அன்னையர் தின விழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தி பெடரல் மற்றும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன இணைந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மினி மாரத்தான் போட்டியை இன்று  நடத்தியது. 

மாரத்தான் போட்டியை  அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது ஆண்களுக்கு 10 கிலோமீட்டர், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.     

 போட்டியில் 10 வயது முதல் 50 வரை உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவுக்கு  முறையை 10,000 ரூபாய் 7,000 ரூபாய், 5000 ரூபாய் மற்றும் பெண்கள் பிரிவுக்கு முறையை ஐந்தாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட தடகள சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News