விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை - டிராக்டர் பேரணி
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவது குறித்து ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி விவசாயிகள் வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
Update: 2024-01-28 01:36 GMT
திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் பிரதான கோரிக்கையாக விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக வேண்டும் டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் போது ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக 50 மேற்பட்ட டிராக்டர் மற்றும் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.