கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்;

Update: 2024-01-30 01:50 GMT

கலைஞர் நூலகம் 

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நூலகத்தை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் இளைஞர் அணி அமைக்க வேண்டும் என திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராஜபுரம் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நூலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஏராளமான வாசகர்கள் இந்த நூலகத்துக்கு வருகை தந்து ள்ள புத்தகங்களை வாசிக்க துவங்கினார்கள் இந்த நூலகத்தில் திராவிட இயக்க வரலாறுகள் குறித்தும் கலைஞரின் பல்வேறு புத்தகங்கள் அண்ணா பெரியார் மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம் பிடித்துள்ளன.இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த் சேகரன் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார் இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் வட்ட செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News