புனரமைக்கப்பட்ட பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்
திருவட்டாரில் புனரமைக்கப்பட்ட பேருந்துகளை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்தார். ;
By : King 24x7 Website
Update: 2023-10-26 05:46 GMT
பேருந்துகளை இயக்கி வைத்த அமைச்சர்
திருவட்டார் அரசு போக்குவரத்துக்கழகத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேச்சிப்பாறை - குலசேகரம், கன்னியாகுமரி - திற்பரப்பு, அருமனை - தக்கலை, குலசேகரம்- கானாவூர், தக்கலை - திருவரம்பு ஆகிய வழித்தடங்களில் இயங்கி வந்த ஐந்து பேருந்துகள் புனரமைக்கப்படு நேற்று வழித்தடத்தில் இயக்கும் விழா நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பச்சைக்கொடி அசைத்து பேருந்துகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜாண் பிரைட், முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கூறியதாவது,” நீண்ட காலமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு புதிய பேருந்துகள் இல்லாத நிலை இருந்தது. தற்போது உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 100 பேருந்துகள் கேட்டிருந்தோம். அதில் 97 பேருந்துகள் வழங்கப்படும் என கூறப்பட்டது. 37 பேருந்துகள் வந்து விட்டது. அந்த பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. திருவட்டார் பணிமனையில் இருந்து 5 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது. இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். தொடர்ந்து பஸ்சில் பொதுமக்கள், கட்சியினர், அதிகாரிகளுடன் அமைச்சர் பயணித்தார்.