பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

Update: 2023-12-15 12:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ரூ.243.78 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் , ரூ.106.20 கோடி கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான இடத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கர். புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124 எண்ணிக்கை. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142 எண்ணிக்கை. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78 எண்ணிக்கை. ஆக 404 மொத்த பேருந்து நிறுத்த தடங்களிளும் . 60 நகரப்பேருந்து நிறுத்த தடங்களும் . 70 கடைகளும் கட்டப்படவுள்ள்து .

556 நான்கு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைய உள்ளது.. 1125 இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களும் . 350 ஆட்டோ நிறுத்தங்களும் உள்ளது . நகரும் படிகட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இங்கு பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் , கனரக சரக்கு வாகன முனையம் , தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது. சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ,சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், ஒருங்கிணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை அமையவுள்ளது.

இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன்,மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர செயற்பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News