பெருமாள் ஏரியை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு
Update: 2023-12-04 05:48 GMT
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பெருமாள் ஏரியில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) /திட்ட இயக்குநர் ரா.சரண்யா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.