மெய்நிகர் ஆய்வகத்தை திறந்து வைத்து அமைச்சர் ஆய்வு
காட்டுமன்னார்கோவில் அருகே ம. மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
Update: 2024-02-08 05:18 GMT
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ம. மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 12. 5 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மெய்நிகர் ஆய்வகத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். உடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, அரசு முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை G. பிரகாஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.