மேட்டுப்பாளையத்தில் கிராம சாலைகள் வழியாக ஜாக்கிங் சென்ற அமைச்சர்

மேட்டுப்பாளையத்தில் கிராம சாலைகள் வழியாக ஜாக்கிங் சென்ற அமைச்சர்.

Update: 2024-06-08 14:11 GMT

ஜாக்கிங் சென்ற அமைச்சர் 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு உடன் கூடிய கட்டிடம் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காரமடை வட்டார பொது சுகாதார கட்டிடம் மற்றும் ரூபாய் 22.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செவிலியர்,

குடியிருப்பு கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைக்க உள்ளார்.இதற்காக அவர் நேற்று இரவே மேட்டுப்பாளையம் வந்தடைந்த அவர் இன்று அதிகாலை காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் உடற்பயிற்சியை தொடங்கினார்.

அங்கிருந்து வனபத்திரகாளியம்மன் கோவில்,தேக்கம்பட்டி,தேவனாபுரம்,மேடூர், சாலை வேம்பு,கண்டியூர், வெள்ளியங்காடு வழியாக தோலம்பாளையம் வரை சுமார் 21 கிலோமீட்டர் ஜாக்கிங் சென்றார்.அப்போது கிராம மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வியல் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

திடீரென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தங்களது பகுதிகளில் ஜாகிங் சென்றதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர்.மேலும் கராத்தே பயிலும் மாணவர்கள் சிலர் அமைச்சருடன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அமைச்சருடன் உள்ளூர் திமுக நிர்வாகிகளும் ஜாக்கிங் சென்றனர்.

Tags:    

Similar News