துரை வைகோவை ஆதரித்து அமைச்சா் கே.என். நேரு பிரச்சாரம்

திருச்சி கிராப்பட்டி பகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சா் கே.என். நேரு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Update: 2024-04-01 04:40 GMT

அமைச்சர் கே.என். நேரு பிரசாரம் 

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட கிராப்பட்டி பகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் திருச்சி மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தாா். அப்போது அமைச்சா் கே.என். நேரு பேசுகையில், திமுக அரசு எப்போதுமே பொதுமக்கள், வியாபாரிகள், தொழில்முனைவோருக்கு ஆதரவாக இருக்கும். நாங்கள் கூட்டணிக் கட்சிக்கு எப்போதும் விசுவாசமாகவும், நியாயமாகவும் இருந்து வருகிறோம்.

ஏற்கெனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி திருச்சியில் வென்றதைப் போல, தற்போது மதிமுகவின் துரை வைகோவையும் வெற்றி பெற வைப்போம். மதிமுகவின் தீப்பெட்டி சின்னம் புதிது, ஆனால் பெண்களுக்கு பழையது. அந்த வகையில் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

இதில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயா் அன்பழகன், மாநகரச் செயலா் மதிவாணன், மதிமுக அவைத் தலைவா் அா்ஜுன்ராஜ், மாவட்டச் செயலா் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News