ஆத்தூர் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
நாட்டு மக்களுக்கு தேவையான தேர்தல் அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை இருப்பதாகவும் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Update: 2024-03-21 09:30 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அமைச்சர் நேரு திமுக சார்பில் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 30 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் அதற்கான இடத்தினை ஆய்வு செய்திருப்பதாகவும், திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மகளிர் உரிமைத் தொகை 1 கோடியே 15 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கிடைக்கப்படாதவர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு அவர்களுக்கு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் நாட்டுக்கு தேவையான தேர்தல் அறிக்கையை கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.