திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு சத்திப்பு.

லால்குடி அருகே கல்லக்குடி அண்ணா நூலகத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2024-04-14 05:46 GMT

அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள அண்ணா நூலகத்தில் கல்லக்குடி பேரூர் கழக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு நேற்றிரவு சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, கல்லக்குடி பேரூர் கழக செயலாளர் பால்துரை மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News