பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்

குன்னம் பகுதியில் கட்டப்படும் கல்லூரியின் விடுதியை பார்வையிட்டார்

Update: 2023-12-01 05:42 GMT
நிகழ்வை அமைச்சர் தொடங்கி வைத்த போது 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரில் 100 மாண விகள் தங்கும் வசதியுடன் ரூ.2 கோடியே 77லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்ப டுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவிகள் விடுதிக்கட்டிடத்தை முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை அடுத்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் வேப்பூரில் கட்டப்பட்டு உள்ள விடுதியில் குத்துவிளக் கேற்றியும் விடுதியை பார்வையிட்டும் அதன் வசதிகள் குறித்து மாணவிகளிடம் கேட்டு அறிந்தனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து குன்னம் பகுதியில் ரூ.8 கோடி செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி, வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பில் உள்ள சத்தியபாலகங்காதரன், வட்டாட்சியர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News