மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.ரூ.84.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

Update: 2024-03-07 07:00 GMT
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு நல உதவி வழங்கிய அமைச்சர்

கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் விழா மற்றும் விளையாட்டு போட்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக  லூயி பிரெய்லி கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நடந்தது.       

நாகர்கோவில் மாநகராட்சி ரெ.மகேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு        10 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.96.11 ஆயிரம் மதிப்பில் ரூ.9.61 இலட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (ஒரு கால் பாதிப்பு), 47 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.96.11 ஆயிரம் மதிப்பில் ரூ.45.12 இலட்சத்தில் இரண்டு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (இரண்டு கால் பாதிப்பு), 3  மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.1.13 இலட்சம் என ரூ.3.4 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (முதுகு தண்டுவடம் பாதிப்பு), 6 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.1.06 இலட்சம் என ரூ.6.36 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி மற்றும் பல்வேறு மாற்று திறனாளிகள்  என மொத்தம் 208 பயனாளிகளுக்கு ரூ.84.46 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

 அதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவ மாணவியர்களுக்கு  பரிசுகள்  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் சு.சிவசங்கரன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News