பிரதமர் பெட்ரோல் விலை மர்மத்தை வெளிப்படையாக பேசாதது ஏன்?

பிரதமர் பெட்ரோல் விலை மர்மத்தை வெளிப்படையாக பேசாதது ஏன் ?அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை.

Update: 2024-03-16 05:08 GMT

அமைச்சர் மனோ தங்கராஜ்

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2014 இல் இந்தியாவில்  கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தபோது பெட்ரோல் 72 ரூபாய்க்கும், டீசல் 55 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.  ஆனால் 2023 ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் சராசரி விலை வரும் 82.5 டாலர் மட்டுமே இருப்பினும், அதிர்ச்சி அளிக்கும் விதமாக பெட்ரோல் 103 டீசல் 95 விற்கப்படுகிறது. செப்டம்பர் 2023 நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கை படி இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் 5826.96 கோடி லாபம் ஏற்றி உள்ளது. ஒவ்வொரு பெட்ரோலிய நிறுவனங்களும் பொதுமக்களின் பணத்தை உறிஞ்சி மலையளவு லாபத்தில் புரளுகின்றன. அப்படி இருக்க பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியாததற்கான காரணத்தை நாட்டு மக்களுக்கு விளக்குவாரா ? பிரதமர் மோடி.பொதுமக்களின் பணத்தில் இயங்கும் பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள் அந்நிய நாட்டு முதலீட்டாளர்களுக்கும், தனியார் பண முதலைகளுக்கும் லாபம் ஏற்றி கொடுப்பதற்காக எரிபொருள் விற்பனையின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுகிறதா?.மாதா மாதம் மன்கி பாத் மூலம் உரையாற்றும் பிரதமர் பெட்ரோல் விலையின் மர்மத்தை வெளிப்படையாக பேசாதது ஏன்? நாட்டு மக்களுக்கு பிரதமர் விளக்கம் அளிப்பாரா? .இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News