அலங்காநல்லூரில் அமைச்சர் மூர்த்தி தேர்தல் பிரச்சாரம்
அலங்காநல்லூரில் அமைச்சர் மூர்த்தி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.;
Update: 2024-04-05 15:55 GMT
அலங்காநல்லூரில் அமைச்சர் மூர்த்தி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று அமைச்சர் தலைமையில் திமுகவினர் தேர்தல் பரப்புரை செய்தனர். தேனி பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் அமைச்சர் மூர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அவருடன் வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ஊர்வலமாக கிராமம் தோறும் சென்று தேர்தல் பரப்புரை செய்தனர்.