மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிக்கப்பட்ட கிராமங்களை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 15:03 GMT
ஆறுதல் தெரிவித்த அமைச்சர்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 18 அன்று பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடு சேதமடைந்த உண்டியலூர் கிராமத்தில் ஆதரவற்ற முதியோருக்கு ஆறுதல் கூறி உடனடி உதவியாக நிவாரணத் தொகையை வழங்கினார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் உடன் உள்ளார்