திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் அமைச்சர் பங்கேற்பு!

திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Update: 2024-06-12 07:11 GMT

மணமக்களுடன் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தரடாப்பட்டு ஊராட்சியை சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் நேற்று , தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், ப.கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News