மரக்காணத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர்

மரக்காணத்தில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க அமைச்சர்-திரளான கூட்டணி கட்சியினர் பங்கேற்பு.

Update: 2024-03-26 17:35 GMT

 வேட்பாளர் அறிமுக கூட்டம் 

விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாராளுமன்ற தொகுதி மற்றும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி சார்பில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்து பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இதில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், ஒன்றிய சேர்மேன்கள் மற்றும் கட்சிகளின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் பேசியது விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் ரவிக்குமார் எம்.பி யாக இருந்த பொழுது பல்வேறு திட்டங்களை இப்பகுதிக்கு செயல்படுத்தி உள்ளார். தமிழக மக்களுக்கு முதலமைச்சர் கொண்டுவந்துள்ள சாதனைகளை கூறி நமது நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். மோடி ஆட்சியை அகற்றுவதே இந்திய கூட்டணியின் நோக்கம் ஆகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட ஆட்சியில் கொள்கை. திமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இந்தியா முழுக்க ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்திய கூட்டணியில் பிரதமராக ஆக முடியும். நமது வேட்பாளர்களுக்கு பெண்கள் 100% வாக்களிக்க தயாராக உள்ளனர். அதிமுக கட்சி இரண்டு பிளவுகளாக உள்ளது. அவர்கள் பல இடங்களுக்கு வேட்பாளர்களைத் தேடி வருகின்றனர். தமிழகத்தின் உரிமைகளை மீட்க மோடி தலைமையிலான பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் இங்கு போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பேசினார்.
Tags:    

Similar News