குமரி வெள்ள அபாயம் - நீர்பிடிப்பு பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர். 

ஆய்வின் போது அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 12:35 GMT
வைக்கல்லூரில் அமைச்சர் ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தொடர் மழை எச்சரிக்கை விடபட்டுள்ளதை தொடர்ந்து அமைச்சர் த.மனோ தங்கராஜ் இன்று பேச்சிப்பாறை அணை மற்றும் தாமிரபரணி ஆறு ஓடும் கிள்ளியூர் மங்காடு சம்பத்து பாலம், வைக்கல்லூர் ஆற்றுப்பாலங்களை பார்வையிட்டு தெரிவிக்கையில், குமரி மாவட்டத்தில்  நேற்று மாலை முதல்  கன மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட  அனைத்து அணைகளின் நீர்அளவு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி,  ஆறுகளில் கலந்து தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.  மாவட்டம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள்   பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மழையினால் பாதிப்புக்கு உள்ளான அனைத்து தரப்பட்ட  மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என  அமைச்சர்  தெரிவித்தார்.இந்த ஆய்வுகளின் போது  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார்,  பத்மநாபபுரம்  சார் ஆட்சியர் எச்.ஆர்.கெளசிக், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஜோதிபாஸ், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News