நாமக்கல்லில் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்
நாமக்கல்லில் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.
அரசு பள்ளியில் படித்தவர்கள் விஞ்ஞானியாகி சாதனை படைத்துள்ளனர் - விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் - எம்.பி.ராஜேஷ்குமார் பேச்சு. நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் எம்.பி.ராஜேஷ்குமார் பேசுகையில், சந்திராயன் திட்டத்தின் முக்கிய விஞ்ஞானிகளாக செயல்பட்ட சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்து ஆகியோர் அரசு பள்ளியில் படித்து சாதனை படைத்தவர்கள் அதேப்போல இங்கு இருக்ககூடிய ஆட்சியர், எம்.எல்.ஏ, நான் உட்பட அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி எனவே மாணவர்கள் நன்றாக படித்து முன்னரே வேண்டும் என்றார். நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 11,110 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா , மாவட்ட கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.