சாலைபணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

சிவன்மலையில் புதிய சாலைபணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-13 10:11 GMT

சிவன்மலையில் புதிய சாலைபணிகளை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், சிவன்மலை ஊராட்சி, ராம பட்டினத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் சிவன் மலை சிக்கரசம்பாளையம் சாலை முதல் இராமபட்டினம் வரையிலும், படியூர் ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் காலனி முதல் பழைய காரன் தோட்டம் வரையிலும், பொத்திபாளையம் ஊராட்சி பொத்திபாளையம் சாலை முதல் வடக்கு தோட்ட வரை சாலை அமைக்கும் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News