சுசீந்திரம் கோவிலில் அமைச்சர் ஆய்வு

சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில் தெப்பக்குளத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்து குளத்தை தூய்மைப்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.;

Update: 2024-06-12 04:03 GMT

அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு

கன்னியாகுமரி  மாவட்டத்தினை  குப்பையில்லா மக்கள் இயக்கமாக மாற்றுவோம் என்ற நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்டத்திற்குட்பட்ட உணவு விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அப்டா மார்கெட் வியாபாரிகள் உள்ளிட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கீழ்தளத்தில் உள்ள காணொளிகாட்சி அரங்கில்  அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்தாய்வு மேற்கொண்டார்.       

Advertisement

அதனைத்தொடர்ந்து சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில் அருகிலுள்ள தெப்பக்குளத்தினை பார்வையிட்டு, அக்குளத்தினை தூய்மைபடுத்துவது குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர்  கலந்தாலோசனை மேற்கொண்டார்.  நடைபெற்ற நிகழ்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அணு விஞ்ஞானி முனைவர் டேனியல் செல்லப்பா,  உட்பட துறை அலுவலர்கள் உள்ளாழ்சி பிரதிநிதிகள், மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News