கடலூரில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றிய அமைச்சர்கள்

100 அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றம்;

Update: 2023-12-25 08:28 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News