வளர்ச்சி பணிகளின் ஆய்வுக் கூட்டம்
வளர்ச்சி பணிகளின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-29 06:08 GMT
ஆய்வு கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பல்வேறு அரசு துறைகள் சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், முன்னிலை விதித்தனர். இக்கூட்டத்தில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு பேசினார். - கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், விகிதம், நிறுத்தப்பட்ட குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடைைபெற்றதது. கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தமகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் தபிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்) உட்பட அனைத்து துறை உயர் அலுவலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.