சோளிங்கரில் குப்பைக்கு தீ வைத்த மர்மநபர்கள்: பொதுமக்கள் அவதி
குப்பைகளுக்கு தீ வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-26 14:18 GMT
பற்றி எரியும் குப்பை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பாணாவரம் சாலை ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள உடையார்பாளையம் மலைப்பகுதியில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் இருந்து வெளியேறி புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறால் அவதிப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 100 டன் குப்பை எரிந்து சாம்பலானது. குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.