கலப்பு திருமணம்; அதிர்ச்சி அளித்த சார் பதிவாளர்

சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்ய அனுமதிக்காததால், ஊத்துக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

Update: 2023-12-29 09:39 GMT

சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்ய அனுமதிக்காததால், ஊத்துக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த தம்பதியினர் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த நம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த 2022 ஆண்டு திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த கீதாராணி என்பவரை காதலித்து அவரது பெற்றோர்களுடைய சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஓராண்டு கழித்து வீரமணி அவருடைய மனைவியும் தங்களுடைய கலப்புத் திருமணத்தை பதிவு செய்வதற்காக ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இவர்களுடைய ஆவணங்களை பெற்றுக்கொண்டு சரிபார்த்த சார் பதிவாளர் சிறிது நேரம் கழித்து பதிவு செய்வதாக கூறியுள்ளார்.ஆனால் மூன்று மணி நேரம் தம்பதியரை காக்க வைத்து பிறகு வீரமணி அவருடைய மனைவி கீதா ராணி ஆகிய இருவரையும் அழைத்த சார்பதிவாளர் உங்களுக்கு பதிவு திருமணம் செய்ய முடியாது என்று ஏதேதோ காரணங்களை கூறியுள்ளார். அப்போது கணவன் -மனைவி இருவரும் சார் பதிவாளரிடம் எதனால் எங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்று கேட்ட போது அதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியுள்ளார்.

எதற்காக புறக்கணித்தேன் என்பதனை ஒரு கடிதம் மூலமாக உங்களுக்கு தருகிறேன் என்று கூறி கடிதத்தை வழங்கி உள்ளார். அதில் மணமகளின் தந்தை இறந்துள்ளதாகவும் அதற்கான சான்றுகளை இணைக்கப்படாததால் பதிவு திருமணத்தை ரத்து செய்ததாக கூறப்பட்டிருந்தது, ஆனால் திருமணம் பதிவு செய்து கொள்ள கொடுக்கப்பட்டிருந்த படிவத்தில் மணமகனின் தாய் இறந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

இந்நிலையில் சார் பதிவாளர் வழங்கிய கடிதத்தில் மணமகளின் தந்தை இறந்து உள்ளதாகவும் அதற்கான இறப்பு சான்றுகளை இணைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் ஒரு நபருக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று கேட்டது தம்பதியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இது போன்று கலப்பு திருமணத்திற்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகளினால் பொது மக்களும் தம்பதியரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் இது போன்ற அரசு அதிகாரிகளின் கவனக்குறைவினால் காதல் தம்பதியர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. எனவே இதுபோன்று மெத்தன போக்கில் செயல்படும் சார்பதிவாளர் மீது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து கலப்புத் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News