மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன மக்களை தாக்கும் இஸ்ரேலை கண்டித்து இடலாக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
Update: 2024-06-29 08:23 GMT
கன்னியாகுமரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இடலாக்குடியில் பாலஸ்தீன மக்களை தாக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் காயல் ஹமீது, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் அமீர் கான், மாவட்ட பொருளாளர் ஜாதிக் அலி உட்பட மாநில துணைச் செயலாளர்கள் மேலும் விடுதலை சிறுத்தை கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அஷ்ரப் அலி, முகமது ராவி, ஐயப்பன், அந்தோணி அலங்காரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.