குறிஞ்சிப்பாடி அருகே மனவளர்ச்சி பள்ளிக்கு எம்எல்ஏ உதவி
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மனவளர்ச்சி பள்ளிக்கு எம்எல்ஏ வேல்முருகன் உதவி செய்தார்.;
Update: 2024-01-19 04:07 GMT
பள்ளிக்கு உதவி
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் 35 சிறப்பு குழந்தைகளுடன் இயங்கிவரும் வசந்தம் மனவளர்ச்சி குன்றியோருக்கான உறைவிட சிறப்பு பள்ளிக்கு பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேரில் சென்று குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் பிற தேவைகளுக்காக ரூபாய் ஐம்பது ஆயிரத்தை (50000) வழங்கி, இனிப்புடன் நேற்று மதிய உணவளித்து மகிழ்ந்தார்.