மேட்டூரில் பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்.எல்.ஏ பூமி பூஜை.

Update: 2023-11-20 08:09 GMT

திட்ட பணிகளுக்கு பூமி பூஜை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி சிந்தாமணியூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் புதிய 8 வகுப்பறைகள் கட்டுதல், கூணாண்டியூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல், கீரைக்காரனூரில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இப்பணிகளை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், கூணாண்டியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், ஒன்றிய தலைவர் பகத்சிங்,ஒன்றிய செயலாளர் மாதப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News