பாபநாசத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்கள் வழங்கிய எம்எல்ஏ
தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின கீழ் பாபநாசத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார்.
தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்: பாபநாசத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்கள், ஜவாஹிருல்லா எம்எல்ஏ வழங்கினார் தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்ணில் உயிர் கரிம சத்துக்களையும் பயிர் மகசூலை அதிகரிக்க விவசாயிகளை பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டமான,
தமிழக முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரங்கள் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்களை வழங்கினார்.
மேலும் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் மறறும் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் ஆகியவற்றையும் வழங்கினார். முன்னதாக, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை,வேளாண் ஒழுங்குமுறை விற்பனக்கூடம் ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து இத்துறைகளின் அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு விளக்கம் அளித்தனர்.
பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், திமுக பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் என்.நாசர், மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா,
மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன்,மாவட்ட விவசாய அணிச் செயலாளர் முஹம்மது பாரூக் மற்றும் திமுக,மமக நிர்வாகிகள், வேளாண்,தோட்டக்கலைத்துறை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளிட்ட துறைகளின் பணியாளர்கள்,விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.