காளி பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் காளி பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.;
Update: 2024-02-12 08:38 GMT
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் காளி பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் காளி பேட்டையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே சம்பத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு வேலையில்லா இலவச மிதிவண்டியிணை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.